10TH- STD - இந்திய அரசியலமைப்பு -

1.    அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது -அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA).

2.    அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1946.

3.    அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு-1946டிசம்பர் 9.

4.    அரசியலமைப்பை நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -1949 நவம்பர் 26.

5.    அரசியலமைப்பு நடைமுறை வந்த ஆண்டு - 1950-ஜனவரி – 26.

6.    அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவர்-சச்சிதானந்த சின்கா.

7.    அரசியலமைப்பு நிர்ணய சபையின்  தலைவர்-ராஜேந்திர பிரசாத்.

8.    துணை தலைவர்கள் - H.C. முகர்ஜி, V.T கிருஷ்ணமாச்சாரி.

9.    அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்த உறுப்பினர்கள்- 389.

          1.    மாகாண பிரதிநிதிகள்-292.

          2.    சுதேசி அரசுகளின் நியமன உறுப்பினர்கள்-93.

          3.    மாகாண முதன்மை ஆணையர்3.

          4.    பலுசிஸ்தான் -1.

10.   அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டம் 11 -அமர்வுகளாக 166 -நாட்கள் நடைபெற்றது,  முன்வைக்கப்பட்டன திருத்தங்கள் -2473.

11.   அரசியலமைப்பு சட்ட வரைவு குழு தலைவர் - B. R அம்பேத்கர்.

12.   இந்திய அரசியலமைப்பின் தந்தை - Dr. B. R. அம்பேத்கர்.

13.   இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது இருந்த பகுதிகள் , சரத்துகள் , அட்டவணைகள் - 22 பகுதி, 395 சரத்து, 8 அட்டவணைகள்.

14.   தற்போது - 25 பகுதி,        சரத்து, 12 அட்டவணைகள்.

15.   இந்திய அரசியலமைப்பு சட்டம் யாரால் இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதப்பட்டது -பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா.

16.   இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்:

          1.    எழுதப்பட்ட நீளமான அரசியலைமைப்பு.

          2.    பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டது.

          3.    நெகிழும் தன்மை மற்றும் நெகிழா தன்மை.

          4.    கூட்டாட்சி முறை, நாடாளுமன்ற முறை.

          5.    சுதந்திரமான நிதித்துறை.

          6.    ஒற்றைக் குடியுரிமை.

          7.    இந்திய சமய சார்பற்ற நாடு.

17.   முகவுரை Preamble என்ற சொல்-  அரசியலமைப்பு அறிமுகம் () முன்னுரை.

18.   அரசியலமைப்பின் திறவுகோல்  -முகவுரை.

19.   நேருவின் குறிக்கோள் தீர்மானம் நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -1947 ஜனவரி -2.

20.   முகவுரை   திருத்தப்பட்ட ஆண்டு - 1976-42 ஆவது சட்ட திருத்தம் - ஒரு முறை

21.   1789 -ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்கள் - சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம்.

22.   1976 - 42 ஆவது திருத்தம், மூலம் சேர்க்கபட்ட  மூன்று சொற்கள்-சமதர்மம், சமயச்சார்பின்மை , ஒருமைப்பாடு.

23.   சிட்டிசன் (Citizen) என்ற செல் சிவிஸ் ( Civis) என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் இதன் பொருள் - நகர அரசில் வசிப்பவர்.

24.   குடியுரிமை - பகுதி II - சரத்து 5- 11.

25.   குடியுரிமை சட்டம் - 1955  .

26.   குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 8.

27.   முதலில் வழங்கிய குடியுரிமை சட்டம்  - காமன்வெல்த் குடியுரிமை.

28.   காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்ட ஆண்டு - 2003 .

29.   இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும்  - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.

30.   குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1955.

          1.    குடியுரிமை பெறுதல் - 5 வழி.

          2.    குடியுரிமை இழத்தல் - 3 வழி.

31.   குடியுரிமை பெறுதல் : 5 வழி.

          1.    பிறப்பு.

          2.    வம்சாவளி .

          3.    பதிவு செய்தல்.

          4.    இயல்புரிமை.

          5.    பிரதேச இணைப்பு

32.   குடியுரிமை இழத்தல் : 3 வழி.

          1.    துறத்தல்.

          2.    முடிவுரை செய்தல்.

          3.    இழத்தல்.

33.   அடிப்படை உரிமை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது -அமெரிக்கா ஐக்கிய நாடுகள் USA.

34.   அடிப்படைக் கடமை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது-முன்னாள் சோவியத் யூனியன் USSR .

35.   அடிப்படை உரிமை- பகுதி - III - சரத்து -12-35.

36.   முதலில் எத்தனை அடிப்படை உரிமை இருந்தது – 7.

37.   தற்போது உள்ள அடிப்படை உரிமை- 6.

38.   இந்தியாவின் " மகாசாசனம்" என அழைக்கப்படும் பகுதி - பகுதி- III அடிப்படை உரிமைகள்.

39.   இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான்  எந்த ஆண்டு வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே மகா சாசனம் எனப்படுகிறது -1215.

40.   எந்த ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி எந்த அடிப்படை உரிமையில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது -1978- 44 வது திருத்தம். சரத்து –31.

41.   சொத்துரிமை தற்போது - பகுதி – XII - சரத்து - 300 A.

42.   நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை - நீதிப்பேராணை.

43.   ஆட்கொணர் நீதிப்பேராணை -சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்வதில் இருந்து இது பாதுகாக்கிறது

44.   கட்டளையுறுத்தும் நீதிப் போராணை - மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினை சம்பந்தப்பட்ட துறையில் இருந்து நிறைவேற்றிக்கொள்ள முடியும்

45.   தடை உறுத்தும் நீதிப் பேராணை -ஒரு கீழ் நீதிமன்றம் தனது சட்டை எல்லை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது.

46.   ஆவணக் கேட்போர் நீதிப்பேராணைஉயர்நீதிமன்றம் ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு இடும் ஆணையாகும்

47.   தகுதி முறை விணவும் நீதிபேராணை - சட்டத்திற்குப் புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடை செய்கிறது.

48.   352- அவசர நிலையின் போது எந்த உரிமை தாமாகவே நிறுத்தப்படும்- சரத்து 19.

49.   352-அவசர நிலையின் போது தடை செய்ய முடியாதது - சரத்து 20, சரத்து 21.

50.   அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது-அயர்லாந்து.

51.   அரசு நெறிமுறைக் கோட்பாடு- பகுதி IV , சரத்து 36 – 51.

          1.    மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

          2.    சமதர்ம, காந்திய, தாராள - அறிவுச் சார்ந்தவை.

          3.    நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.

          4.    நாட்டின் நிர்வாகத்திற்கு அவசியமானது.

          5.    ஓர் அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

          6.    சமுதாய நலன் தருவதே இதன் நோக்கம்.

52.   இந்திய அரசியல் அமைப்பின்" புதுமையான சிறப்பம்சம்" எனஅரசு நெறிமுறைக் கோட்பாடுகளை  குறிப்பிட்டவர் - B.R அம்பேத்கர்.

53.   அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை- சரத்து -32.

54.   அலுவலக மொழி  -பகுதி XVII - சரத்து 343 – 351.

55.   மத்திய மாநில நிர்வாக உறவுகள் - பகுதி XII - சரத்து 268 - 293.

56.   அவசர கால நெருக்கடி நிலைXVIII - சரத்து - 352,  356, 360.

57.   சிறிய அரசியலமைப்பு  என அழைக்கப்படும் சட்ட திருத்தம் - 1976 - 42 ஆவது சட்ட திருத்தம்.

58.   சொத்துரிமை நீக்கம் - 1978 - 44 ஆவது சட்ட திருத்தம்.

59.   மத்திய மாநில உறவுகள் பற்றிய ஆராய அமைக்கப்பட்ட குழு -1983 -சர்க்காரியா குழு.

60.   இந்திய அரசியலமைப்பில் தொடங்கபட்டபோது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன -7. தற்போது - 6- சொத்துரிமை நீக்கம்.

61.   அடிப்படை கடமைகள் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி-சர்தார் ஸ்வரன் சிங் குழு.

62.   மத்திய - மாநில உறவுகள் பற்றிய  அட்டவணை- 7.

          1.    மத்திய பட்டியல்     -       97    -       100.

          2.    மாநிலப் பட்டியல்   -      66    -         61.

          3.    பொதுப்பட்டியல்     -      47    -         52.

63.   முதலாவது மொழி குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1955.

64.   மொழி குழு அறிக்கை தாக்கல்1956.

65.   அலுவலக மொழி சட்டம்1963.

66.   அலுவலக மொழி சட்டம் திருத்தம்1967.ஆங்கில மொழி காலவரையின்றி தொடரலாம்.

67.   8 வது அட்டவணை - 14 மொழி தொடக்கத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டது - தற்போது - 22.

68.   தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஆண்டுகள்-1962, 1971, 1975.

69.   அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி மற்றும் சரத்துபகுதி - XX - சரத்து-368.

70.   அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் வழிமுறைகள்:

          1.    நாடாளுமன்றத்தின் அவைக்கு வந்து வாக்களித்தவர்களில் 3 ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.

          2.    நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரமுடியும்.

71.   அரசியலமைப்பின் 368-வது சட்டப்பிரிவு எத்தனை வகைகளில் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழி செய்கிறது- 3.

          1.    நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.

          2.    நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.

          3.    நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் திருத்தப்படுதல்.

72.   தீண்டாமை பற்றி குறிப்பிடும் சரத்து-சரத்து 17.

73.   பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு  -சரத்து 16.

74.   ராணுவம் மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல் - சரத்து 18.

75.   மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட5 -துறைகள் .

          1.    கல்வி .

          2.    காடுகள்.

          3.    எடைகள் மற்றும் அளவைகள்.

          4.    பறவைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு.

          5.    உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற அமைப்புகளை தவிர பிற நீதிமன்றங்களில் நீதி நிர்வாகம்.

76.   சர்க்காரியா குழு  பரிந்துரை செய்த - 247  எத்தனை மத்திய அரசு செயல்படுத்தியது -180.

77.   முதல் அவசரநிலை எந்த ஆண்டு எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது -1951 , பஞ்சாப்.

78.   அரசியலமைப்பின் 44 வது சட்ட திருத்தம் சிறிய அரசியலமைப்பு.

79.   அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி மற்றும் சரத்து - பகுதி XX சரத்து-368.

80.   அலுவலக மொழி- பகுதி XVII - 343 - 351.

81.   நிதி உறவுகள்-பகுதி XII சரத்து - 268 – 293

82.   அடிப்படை கடமைகள் - பகுதி IVA - 51A.

83.   Dr.P.Vராஜமன்னார் குழு -1969. மத்திய மாநில உறவுகள்.

84.   சர்க்காரியா குழு1983. மத்திய மாநில உறவுகள்.

85.   M. M. பூஞ்சி2007. அரசின்பல்வேறுநிலைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள்.

86.   M. N - வெங்கடாசலய்யா குழு -2000. அரசியல் அமைப்பு செயல்பாடு .

87.   சர்தார் ஸ்வரன் சிங் குழு - 1976 அடிப்படை கடமைகள்.

88.   நிதிக்குழு-சரத்து280.

89.   செம்மொழிகள்-6.

          1.    தமிழ்- 2004

          2.    சமஸ்கிருதம்- 2005

          3.    தெலுங்கு-2008

          4.    கன்னடம் - 2008

          5.    மலையாளம் - 2013

          6.    ஒடியா-2014.

90.   அடிப்படைக் கடமைகளை:

          1.    ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு அதன் கொள்கைகள், நிறுவனங்கள் தேசியகீதம், தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்.

          2.    சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.

          3.    இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை , ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப்பாதுகாத்தல்.

          4.    தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.

          5.    சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.

          6.    நமது உயர்ந்த பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.

          7.    காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் ,உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.

          8.    அறிவியல் கோட்பாடு மனிதநேயம் ஆராய்ச்சி மனப்பான்மை ,சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்.

          9.    வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.

         10.   தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.

         11.   6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்.